Posts

துங்க்ருஸ் - A helpless lover

Image
  ' துங்க்ருஸ் ' என்றால் ஏதோ ஒரு மொழியில் , வேறொரு பொருளில் அடாவடித்தனமான சேவல் என்று பொருள் . ருக்மிணி பாய் (Shabana Azmi) நடத்தும் விபச்சார விடுதியில் அத்தனை பெண்களுக்கும்    ' துங்க்ருஸ் ' தான் ஒரே வேலைக்காரன் , நண்பன் காவல்காரன் . தன் பெயருக்கு நேரெதிரான குணம் கொண்டவன் இந்தக் கதையின் ' துங்க்ருஸ் '(Naseeruddin Shah). அவன் குற்றேவல் புரியும் விடுதிப் பெண்களுக்கு அவன் இல்லையென்றால் அந்நாள்   ஓடுவதே சிரமம்தான் . அதிலும் குறிப்பாக ருக்மணியின் உதடுகள் பொழுது புலர்ந்து அடங்கும் வரை ' துங்க்ருஸ் ' என்ற பெயரை ஓயாமல் உச்சரித்தன .    விடுதிக்குப் புதிதாக வரும் பெண்களைச் சமாளிப்பதிலிருந்து , ருக்மிணியும் அவளது பெண்களும் சந்திக்கும் அத்தனை சவால்களிலும் உடனிருக்கும் துங்க்ருஸின் இடமென்னவோ விடுதிக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு கூரையின் கீழ்தான் .  ருக்மிணியை அவன் எச்சரிக்கிறான். அதையுமே அழுது கொண்டுதான் செய்கிறான். "இதெல்லாம் பொய் ருக்மிணி, இந்தக் கட்டிடத்தின் சுவர்களைக் கரையான்கள் தின்று கொண்டிர

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Image
   நீ ங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை வெகுநாட்கள் கழித்து ஒரு தெருமுனையில் சந்திக்க நேர்ந்தால் என்ன  செய்வீர்கள் . முராகாமியின் உலகத்தில் நீங்கள் அவர்களுக்கு ஒரு கதை சொல்வீர்கள் . இந்தக் கற்பனை எனக்குப் பிடித்திருக்கிறது . நான் முராகாமியின் வாசகியானதும் அவ்வாறான ஒரு யதார்த்தத்தை மீறிய கற்பனைதான் .      எனது காதலர்கள் ஒவ்வொருவரும் என்னைச் சகிக்கவியலாத ஒரு வலியாகக் கருதி என்னை விட்டு விலகிய தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன் . அவர்களில் ஒருவர் கூட அவ்வலியை எனக்குக் கடத்தாமல் சென்று விடவில்லை என்பதுதான்   இன்றளவும் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும் விஷயமாக இருக்கிறது . முராகாமியின் கதாநாயகர்கள் அப்படிச் செய்பவர்கள் அல்ல . அவர்கள் தங்களது காதலிகளை ஒரு வானவில் இரசிப்பது போல் இரசிக்கின்றனர் . சில நொடிகள் மட்டுமே அணுக்கம் காட்டும் காலைப் பனியையும் கேள்விகளின்றி நேசிப்பது போல் காரணக் காரியத் தேவைகளின்றி நேசிப்பவர்களாக இருக்கின்றனர் . வெளிப்படுத்துதல் தரும் தேவதைகளாகப் பெண்கள் முராகாமியின் கதைகளில் வலம் வருவதைக்