Posts

Light and Thread

Image
  (2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஹான் காங்கின் நோபல் பரிசு விரிவுரை)                 ஒளியின் இழை கடந்த ஜனவரி மாதம். திடீரென்று வந்த இடமாற்றலைத் தொடர்ந்து உடனடியாகக் கிளம்ப வேண்டியிருந்ததால் என் வீட்டின் கிடங்கறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது, காலணிகள் வைக்கும் பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தபோது, அதில் என் குழந்தைப் பருவத்து கையேடுகள் பல இருந்தன. அந்தக் குவியலுக்குக் கீழே ‘கவிதைகளின் புத்தகம்’ என்று பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாகக் கோடிடப்பட்ட தலைப்புடன் ஒரு சிற்றேடு இருந்தது. கையால் மடிக்கப்பட்ட ஐந்து A5 தாள்கள் குத்தூசிகளால் இணைக்கப்பட்டிருந்தன. புத்தகத் தலைப்பின் கீழே இரண்டு கோணல் மாணலான கோடுகள் வரைந்திருந்தேன். ஒரு கோடு இடப்புறமாக ஆறு படிகளில் மேலேறிச் செல்வதுபோலவும், மற்றொன்று வலப்புறமாக ஏழு படிகளில் கீழிறங்கி வருவதுபோலவும் இருந்தன. அது ஏதேனும் முன்னட்டை சித்திரமா? அல்லது வெறும் கிறுக்கலா? 1979 என்று வருடமும் என் பெயரும் பின்னட்டையில் எழுதப்பட்டு, உள்ளேயிருந்த பக்கங்களில் எட்டுக...

துங்க்ருஸ் - A helpless lover

Image
  ' துங்க்ருஸ் ' என்றால் ஏதோ ஒரு மொழியில் , வேறொரு பொருளில் அடாவடித்தனமான சேவல் என்று பொருள் . ருக்மிணி பாய் (Shabana Azmi) நடத்தும் விபச்சார விடுதியில் அத்தனை பெண்களுக்கும்    ' துங்க்ருஸ் ' தான் ஒரே வேலைக்காரன் , நண்பன் காவல்காரன் . தன் பெயருக்கு நேரெதிரான குணம் கொண்டவன் இந்தக் கதையின் ' துங்க்ருஸ் '(Naseeruddin Shah). அவன் குற்றேவல் புரியும் விடுதிப் பெண்களுக்கு அவன் இல்லையென்றால் அந்நாள்   ஓடுவதே சிரமம்தான் . அதிலும் குறிப்பாக ருக்மணியின் உதடுகள் பொழுது புலர்ந்து அடங்கும் வரை ' துங்க்ருஸ் ' என்ற பெயரை ஓயாமல் உச்சரித்தன .    விடுதிக்குப் புதிதாக வரும் பெண்களைச் சமாளிப்பதிலிருந்து , ருக்மிணியும் அவளது பெண்களும் சந்திக்கும் அத்தனை சவால்களிலும் உடனிருக்கும் துங்க்ருஸின் இடமென்னவோ விடுதிக்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு கூரையின் கீழ்தான் .  ருக்மிணியை அவன் எச்சரிக்கிறான். அதையுமே அழுது கொண்டுதான் செய்கிறான். "இதெல்லாம் பொய் ருக்மிணி, இந்தக் கட்டிடத்தின் சுவர்களைக் கரையான்கள் தின்று கொண்டிர...

ஹருகி முராகாமி- யதார்த்தத்திற்கு வண்ணம் பூசும் எழுத்து.

Image
   நீ ங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை வெகுநாட்கள் கழித்து ஒரு தெருமுனையில் சந்திக்க நேர்ந்தால் என்ன  செய்வீர்கள் . முராகாமியின் உலகத்தில் நீங்கள் அவர்களுக்கு ஒரு கதை சொல்வீர்கள் . இந்தக் கற்பனை எனக்குப் பிடித்திருக்கிறது . நான் முராகாமியின் வாசகியானதும் அவ்வாறான ஒரு யதார்த்தத்தை மீறிய கற்பனைதான் .      எனது காதலர்கள் ஒவ்வொருவரும் என்னைச் சகிக்கவியலாத ஒரு வலியாகக் கருதி என்னை விட்டு விலகிய தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன் . அவர்களில் ஒருவர் கூட அவ்வலியை எனக்குக் கடத்தாமல் சென்று விடவில்லை என்பதுதான்   இன்றளவும் எனக்கு வேடிக்கையாகத் தோன்றும் விஷயமாக இருக்கிறது . முராகாமியின் கதாநாயகர்கள் அப்படிச் செய்பவர்கள் அல்ல . அவர்கள் தங்களது காதலிகளை ஒரு வானவில் இரசிப்பது போல் இரசிக்கின்றனர் . சில நொடிகள் மட்டுமே அணுக்கம் காட்டும் காலைப் பனியையும் கேள்விகளின்றி நேசிப்பது போல் காரணக் காரியத் தேவைகளின்றி நேசிப்பவர்களாக இருக்கின்றனர் . வெளிப்படுத்துதல் தரும் தேவதைகளாகப் பெண்கள் முராக...