Posts

Showing posts from September, 2023

பாபா

Image
 பாபாவின் கடிதங்கள் வருவது நின்று ஐந்து வருடங்களாகின்றன.  பாபா தனது கடிதங்களுக்கு விலைவைத்த நாளில் நான் அவரது தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டேன். அது எனக்கு ஒருவிதத்தில் இழப்புதான் என்றாலும் நான் அப்படிச் செய்ததைக் குறித்து துளியளவும் வருந்தவில்லை.  ஐந்து வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரத்தில் நான் வேளாங்கண்ணியில் இருந்த பொழுது மீண்டும் பாபாவின் கடிதம் ஒன்று மின்னஞ்சலில் வந்திருந்தது. நான் அந்த கடிதத்தைத் திறவாமலேயே அழித்து விட்டேன்.  பாபாவின் கடிதங்கள் வந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். அவரது கடிதங்கள் என்னை சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக உயிர்ப்புடன் வைத்திருந்தன. அப்பொழுது நான் சொற்களைத் தின்றுச் செரித்து உயிர் பிழைத்திருந்தேன்.  ஒவ்வொரு மாதமும் அம்மாதத்தின் கடைசி வாரத்தில் பாபாவின் கடிதம் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும். ஒவ்வொரு கடிதமும் அதனதன் இயல்பில் தனித்துவமானவை.   பாபாவின் முதல் கடிதத்தில் அவர் தன்னை ஒரு நாடோடியென்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கிருந்தோ தோன்றிய மேசியாவின் அறிவுரைகள் போல் அவரது கடிதங்கள் எனது மோசமான அனுப...