Posts

Showing posts from March, 2021

ஹமார்ஷியா

 உனக்காக...ஓராயிரம் முறையும் முதல் முறையாக!           - காலித் ஹொசைனி. இந்த உலகம் குழந்தைகளிடம் இன்னும் கொஞ்சம் கருணையாக நடந்து கொள்ளலாம் என்று தோன்றும் போதெல்லாம்  நஃபீஸின் நினைவால் உள்ளம் தளும்பித் தத்தளிப்பதை ஜீவாவால் தவிர்க்க முடிவதில்லை. நஃபீஸ் அவளுக்காகவும் அவள் நஃபீஸ்க்காகவும் பரஸ்பரம் செய்து கொடுத்த உதவிகள் அவ்வாறானவை. இருவருமே ஒருவரையொருவர் கேட்டுப் பெற்றுக்கொள்ளாத உதவிகள். அம்மாதிரியான நேசம் வாய்க்கப் பெற்றவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய அன்பின் உடன்படிக்கைகள் அவை. நஃபீஸ் ஜீவா இருவரும் சந்தித்துக் கொண்டது ஜம்மு காஷ்மீர் மாநிலம்,நக்ரோட்டாவில். நஃபீஸ் அப்பொழுது பதினோறு வயது சிறுவன்.உத்தரபிரதேச மாநிலம் சாஹ்ரன்பூரை சேர்ந்தவன். தன் தந்தையின் பணி நிமித்தமாக அவனும், கணவனின் பணி நிமித்தமாக ஜீவாவும் நக்ரோட்டாவில் வசிக்க வேண்டிய கட்டாயச்சூழலில், வெறுமையில் பூத்த வற்புறுத்தல் உறவாகத்தான் முதலில் அது இருந்தது. நிரம்ப நிரம்ப மூச்சு முட்டுமளவு வழங்கப்பட்டிருந்தத் தனிமையும், இயற்கை சூழலும் இருவருக்கும் வெவ்வேறு மாதிரியான உள்ளத் தடுமாற்றங்களை ஏற்படுத...

போஜ்புரி மால்புவா

தன் வாழ்நாளின் அறுபது வருடங்களை எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பார் என்று காமேஷ்வர் பிரஸாத்தின் மால்புவாவை ருசித்த பொழுது யதேச்சையாக ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. காமேஷ்வரின் மனைவி புஷ்பா எனது தோழி. சற்று வயது முதிர்ந்த தோழிதான் ஆனாலும் அவரின் இளமையில் மயங்காத ஆண்களே இல்லை எனலாம். காமேஷ்வர் புஷ்பா தம்பதியினர் பீகார் மாநிலம் போஜ்பூரை சேர்ந்தவர்கள். இருவருக்குமிடையே பதினைந்து வருட இடைவெளி. அவர்களுக்கு மிகவும் காலந்தாழ்ந்து ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் என் மகனுக்கும் ஒரிரு வயது வித்தியாசம்தான். ஆனால் அவருக்கோ என் தந்தையின் வயது. இப்படி சில முரண்பாடுகளுடன் எங்களது நட்பு இருந்தது.  புஷ்பாவை விட பல வயது மூத்தவரான போதிலும் காமேஷ்வர் பிரஸாத் சற்றும் மனந்தளராமல் குடும்பஸ்தனின் பொறுப்புகளில் கவனம் கொள்வார். எப்பொழுதும் புஷ்பாவை ஸ்கூட்டரில் நகர்வலம் அழைத்துச் செல்வார். அவருக்கு தவறாமல் சேலைகளும் பரிசுப்பொருட்களும் வாங்கித்தருவார். மாதமிருமுறை பியூட்டி பார்லர் அழைத்து செல்வார். இப்படியாக சிறந்த தம்பதியினராக ஊருக்குள் வலம் வந்த அவர்களைப் பார்த்து எனக்கு சில நேரம் பொறாமையாகக்கூட இருக்கும், "இந்த வய...

பபூல் - ஜிப்சி

 பபூலை சந்தித்தது குவஹாத்தியிலிருந்து கொல்கத்தா,சிலிகுரி மேகாலயா, சிரபுஞ்சி, நாகாலந்து பயணங்களின் போது. மனீஷை சந்தித்தது தரம்சாலா குலு மாணாலி மலையேற்ற பயணங்களின்போது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வாழ்வின் வெவ்வேறு சமயங்களில் சற்றும் சம்பந்தமேயில்லாத நிலபரப்புகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்குகளைக் கொண்ட இருவேறு மனிதர்களை சந்தித்ததுதான். இருவருக்கும் குணங்களில் நிறைய வேறுபாடிருந்த பொழுதிலும் வாழ்க்கைக் குறித்தான தேடல்களும் அதற்கான காரணங்களும் நிறையவே பொருந்தி போயின. பபூல்: அவனுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள எங்களை அவன் அனுமதிக்கவில்லை. எங்களுக்கு கார் ஓட்டுனராக கிட்டத்தட்ட ஒரு வார காலம் எங்களுடனே பயணித்தான் அவனுக்கு அதிகபட்சம் இருபத்திரண்டு, இருபத்தி மூன்று வயதிருந்திருக்கும். பபூல் அதிகம் பேசமாட்டான். இன்னும் சொல்லப்போனால் பயணம் துவங்கிய முதல் சில மணிநேரங்கள் அவன் வாயைத்திறக்கவேயில்லை,கேட்ட சில கேள்விகளுக்கும் ஆம் இல்லை என்று பேச்சைத் துண்டித்துக் கொண்டான் நானோ பேசிக்கொண்டே இருப்பேன். எனக்கு எதுகுறித்த சின்ன விஷயமும் தெரிந்து கொள்ள வேண்டும், மற்றும் நிறைய சிரிக்க வேண்டும். நண்பர...

மனீஷ்- வரையாடு

 இமயமலைத் தொடரின் மிக சுலபமான  மலையேற்றம் திரியுண்ட் மலையேற்றப் பாதைதான். சுமார் பத்து கிலோமீட்டர் தூர மலையேற்றம். ஒரு நாளில் ஏறி இறங்கிவிடலாம். ஆனால் பொதுவாக யாரும் அவ்வாறு செய்வதில்லை. அடுத்தநாள் காலை சூரிய உதயத்தைக் காண வேண்டி இரவு அங்கேயே கூடாரங்களில் தங்கி விடுவர்.அயல்நாட்டவர்களின் விருப்பமான சரணாலயமாக இவ்விடம் திகழ்கிறது. தரம்கோட்டில் அறைகள் வாடகைக்கு எடுத்து தங்கிவிடுவர். பின்னர் மாதக்கணக்கில் இங்குள்ள மலைப்பகுதிகளில் சுற்றித்திரிதல் அவர்களின் வழக்கம். இந்தியர்களுக்கு இது மற்றுமொரு புகைப்படக் கிடங்கு. அருகிலிருப்பதாலேயே அவமதிக்கப்படும் அதே வழக்கம்.  தரம்கோட்டில் சுற்றுலா ஒருங்கிணைப்பு ஏஜென்சி மூலம் மனீஷ் அறிமுகமாகினார். அவர் வழிகாட்டியல்ல, மலைமேல் எங்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தின் மேனேஜர். இரவு தங்கிவிட சித்தமாயிருந்ததால் உணவு தண்ணீர், மளிகை சாமான், என அத்தியாவசியப் பொருட்களோடு எங்களுடனே பயணிப்பதாகத் திட்டம். மனீஷ் இளைஞர்.மலைவாழ் குடியைச் சேர்ந்தவர். மிக இயல்பாக எங்களுடன் கலந்துவிட்டார். மேல் திருப்பதி என்பது போல் "மேல் தரம்கோட் "என்ற இடத்திலிருந்துதான் மலையேற்ற...

ஞானி ஏன் மெர்லினை அடித்தார்?

  நீங்கள் எந்தப் புள்ளியில் இங்கிருந்து அங்கு தாவுவீர்கள்? மிகச்சரியாக எந்த சூழலில் நீங்கள் இதிலிருந்து அதுவாகவோ அல்லது அதிலிருந்து இதுவாகவோ மாறுவீர்கள் என்பதை எனக்குத் துல்லியமாகக் கணித்து கூறிவிடுங்கள் அப்பொழுது நானும் இனி இதுதான் என் மார்க்கம் என்று உங்களுடனோ அல்லது வேறு எந்த கொம்பனுக்கு பின்னாலோ கொடி பிடித்துக் கொண்டு குரல் வளை தெறித்துவிடும் அளவிற்கு கோஷம் போடுகிறேன். உங்களைப் போன்ற ஒருத்தனின் மிகக் கீழ்மையான வன்மத்தின் வெளிப்பாட்டை மிக அருகிலிருந்துக் கண்டவள் என்ற முறையில் இக்கேள்வி என்னுள் எழுகிறத. வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் பலியாகிறவர்களுக்கு ஏற்படும் அதேயளவு பாதிப்பு அவ்வன்மத்தை அடக்குமுறையை மிக அருகிலிருந்து கண்டுணர்ந்தவர்களுக்கும் ஏற்படும் என்பதே எனது நிலைப்பாடு.  ஞானி ஏன் மெர்லினை அடித்தார்? இந்தக் கேள்வி இன்று வரை என் மனதை விட்டு அகலவேயில்லை. என்றாவது ஒருநாள் அவரை நேருக்கு நேர் சந்தித்து, "அன்று நீங்கள் ஏன் மெர்லினை அடித்தீர்கள் என்று எனக்குத் தெரியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் அவளை அடித்த பொழுது ஒலித்த சப்தம், அந்த வலி என் மூளையைத் தட்டியெழுப்பி இன...

தோற்ற மயக்கம்.

 ஒருவரது வாழ்விலிருந்து நாம் விரட்டியடிக்கப்படும் போது அதுவும் எந்த பெரிய முகாந்திரமுமில்லாமல் அது நடந்து விடும் பொழுது அதன் விளைவாக ஏற்படும் பெருந்துயரிலிருந்து விடுபட்டு வெளிவருவது மிக சவாலான காரியம்.அதிலும் என்னைப்போன்ற ஒருத்திக்கு அது இன்னுமே கடினம். ஏனென்றால் நான் என்னை மிகவும் நேசித்துப் பழகியவள்.  மாதவி யோகானந்த் தம்பதியினரை சந்திக்கும்பொழுது எனக்கு வாழ்க்கை அவ்வளவு பழகியிருக்கவில்லை, இன்று வரையுமே அப்படித்தான் என்றாலும் அப்பொழுது இன்னுமே கற்பிதங்களினால் ஆளப்பட்டிருந்தேன்.  மனம் இயற்கையாக எதிர்வினையாற்ற துணியும் போதெல்லாம் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு நேர்மை கருணை அன்பு என்று எந்நேரமும் அறநெறிகளை மனதிற்கு போதித்துக் கொண்டே இருப்பேன். உள்ளுணர்வு வேறு மாதிரி வழிகாட்டும் போதெல்லாம் அதற்கு ஏதாவதொரு சமாதானம் கூறி அமைதிப் படுத்திவிட்டு நன்னெறிகளின் பாதையை தேர்வு செய்வேன். அப்பொழுது பெளத்த நெறிகள் மேல் பெரிய ஈர்ப்பிருந்ததால், தொடர்ந்து அவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டு காணும் மனிதர்கள் யாவரிடத்திலும் மிகுந்த காருண்யத்தோடு நடக்க முயற்சித்துக் கொண்டே இருப்பேன். இயல்பி...

நட்டாஷா-சினமன் சிகரெட் குறியீடு

  நீலா, சினமன் மணம் வீசும் சிகரெட்டைத் தேடுகிறாளென்றால் அவள் நிலை பிறழ்ந்து விட்டாள் என்று பொருள். அருள் அதை நன்கறிந்திருந்தான். அவ்வாறான நேரங்களில் அவன் அவளுக்கு தூக்க மாத்திரை அளவினை அதிகரித்து விடுவான். அவள் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கினாலும் பரவாயில்லை என்று அவன் விட்டுவிடுவான். அவனுக்கு நீலா வேண்டும். அந்த அப்பாவித்தனம் ததும்பும் பெண், எதைப் பற்றியும் பெரிதும் சிலாகித்துக் கொள்ளாத எளிமையான நீலா அவனுக்கு வேண்டும். ஆனால் அவள் சினமன் சிகரெட் கேட்கும் போதெல்லாம் அருள் பரிதவித்து போய்விடுவான்.  "நீலா வேணாம் நீலா.... நாம நல்லா இருக்கோம். நமக்கு நெனச்சு சந்தோஷப்பட நெறைய நல்ல விஷயம் இருக்கு, சினமன் சிகரெட் வேணாம் நீலா" என்று கிட்டத்தட்ட கெஞ்சும் தொனியில் கேட்பான். நீலாவிற்கு அச்சமயத்தில் கேட்பதெல்லாம் நட்டாஷாவின் குரல் மட்டுமே.  நட்டாஷா பீட்டர்ஸ். நீலாவின் உலகில் அவள் ஒரு தேவதை. பரங்கிமலை பட் ரோடு பகுதியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் நட்டாஷா வசித்து வந்தாள். நீலாவும் அவளும் கல்லூரி நண்பர்கள். நட்டாஷா பொருளாதாரமும் நீலா இலக்கியமும் படித்தார்கள். அவர...

மூங்கில் கூடு.

 அன்பு மனோ, உன்னை வழியனுப்பி விட்டேன். மாலை நேரம், வழமை போல் இரண்டு கோப்பையளவு தேநீர் தயாரித்துக் கொண்டு நாமிருவரும்  அமர்ந்து கதைக்கும் மொட்டை மாடி படிக்கட்டுகள் வரைக் கொண்டு வந்த பிறகுதான்  இனி நீ எப்பொழுதும் திரும்பப் போவதில்லை என்பது நினைவுக்கு வந்தது. மனம் முறிந்த பின்பும் பழக்கங்கள் முறிவதில்லை போலும்.  விரும்பி பழகியவைகளை கைவிடுவது இன்னும் கடினம். அவற்றின் தாக்கம் குறைய சிறிது காலமாகலாம். இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டே உன் தேநீரில் படியும் ஆடை வளையங்களை பார்த்துக் கொண்டே  என் தேநீரின் வெப்பம் தணிவதற்குள் அருந்தி விட முயல்கிறேன். நீ அப்படித்தானே ?சுகங்களை வேகமாக அருந்த முற்படுபவனல்லவா? "ஆறிப்போன பெறகு அதென்ன டீ" இதை அன்றாடம் நீ கூறிக் கேட்டதன் விளைவு, இன்று நீ இல்லாமலும் அச்சொற்கள் கேட்கவே செய்கின்றன.  அண்டை வீட்டு செல்வந்தர் தன் வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கும் பொருட்டு அஸ்ஸாமிலிருந்து  பருத்த மூங்கில் கொம்புகளை வரவழைத்து அவற்றை செதுக்கி தன் வீட்டுச் சுவற்றிலிருந்து, கார் ஷெட் கூரை வரை அனைத்தையும் மூங்கில் மயமாக மாற்றியதை நம் வீட்டு மாடியிலி...

சோஹ்ரா

     சோஹ்ரா மேட்டுநிலப் பகுதியின் மழை நாட்கள் குறித்து நானும் சக்ஸேனாவும் சில மாதங்களுக்கு முன்பே பேசியிருந்ததாக ஞாபகம்.  அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக நான் இரண்டு முறை சோஹ்ராவிற்கு செல்வேன் என்றும் அதற்கு சக்ஸேனாவின் ஐந்து நிமிட வருணனை காரணமாக அமையும் என்று அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அப்படியல்ல. காலத்தின் அளவுகோல்களை மீறி வாழ்கிறேன் என்பதாலோ என்னவோ, வருங்காலத்தைக் குறித்த சமிக்ஞைகளை காலம் இன்றே வழங்குவதை கணித்து விட முடிகிறது. நாளை வருபவற்றை காலம் நேற்றே உணர்த்தி விட்டதைப் போன்றதொரு மனநிலையின் பயனாக இப்பொழுதெல்லாம் அதிக நேரம் நேற்றைய நிகழ்வுகளைத்  திரட்டியெடுத்து அவற்றில்  சப்தமான நினைவுகளை மட்டும் தனியே சேகரித்து வைத்துக் கொள்கிறேன். கைப்பையில் வைத்திருக்கும் சொல்லகராதிப் போல் அவற்றையும் என் விரல் நுனிகளில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறேன். நாளைக் குறித்த குறியீடுகள் அல்லவா, அதனால் சுட்டிக்காட்ட வேண்டிய கவனத்தோடு அவற்றை விரல்களோடு பொருத்தி வைத்திருக்கிறேன்.      சக்ஸேனா மிகவும் வேடிக்கையாக பேசுவார். ஒரு விகடகவியின்...