ருத்ரம் நமகம் சமகம்!
இருபது வருடங்கள் முன்பு வரை பிராமின்ஸ் என்றழைக்கப் படும் சமூகத்தினர் மற்ற வகை மனிதர்களோடு இணக்கம் கொள்ளாதிருந்தனர். அந்தரங்கமாக அவர்களது செயல்பாடுகள் வேறு விதமாக இருந்தாலும் பொதுவெளியில் அவர்கள் மற்ற சாதியைச் சேர்ந்தவரிடமிருந்துத் தள்ளியே இருந்தனர். அந்த நிலை இப்பொழுது மாறியிருப்பதாகத் தோன்றுகிறது. பிராமின்ஸ் கொஞ்சம் விதி தளர்த்தல் செய்திருக்கின்றனர் போலும். சென்ற வாரத்தில் ஒரு நாள் என் தோழி ஒருவரின் தாய் தந்தைக்கு எழுபதாம் கல்யாணம் செய்வதாக அழைப்பு வந்திருந்தது.தோழியின் தாய் பிராமணர் தந்தை ஆதி திராவிடர். குடும்பமும் சுற்றமும் அவர்களை விலக்கி வைத்த வன்மத்தை பெரும்பணக்காரர்களான பிறகு அவர்கள் தீர்த்துக் கொள்ள நினைத்தனர். பணத்தைத் தண்ணீராக வாரி இறைத்து கோலாகலமாக "பீம ரத சாந்தி" நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அவரது மகனும் மகள்களும் அப்பாவிகளாக நின்று அனைவரையும் விருந்தோம்பி வரவேற்றனர். அபபன் ஆத்தாளின் மனதில் கொழுந்தெழுந்த வன்மத் தீயில் புடமிடப் பட்ட அமைதி அவர்களது முகத்திலும் குணத்திலும் மிளிர்ந்தது. ...