Light and Thread
(2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற எழுத்தாளர் ஹான் காங்கின் நோபல் பரிசு விரிவுரை) ஒளியின் இழை கடந்த ஜனவரி மாதம். திடீரென்று வந்த இடமாற்றலைத் தொடர்ந்து உடனடியாகக் கிளம்ப வேண்டியிருந்ததால் என் வீட்டின் கிடங்கறையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது, காலணிகள் வைக்கும் பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. திறந்து பார்த்தபோது, அதில் என் குழந்தைப் பருவத்து கையேடுகள் பல இருந்தன. அந்தக் குவியலுக்குக் கீழே ‘கவிதைகளின் புத்தகம்’ என்று பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாகக் கோடிடப்பட்ட தலைப்புடன் ஒரு சிற்றேடு இருந்தது. கையால் மடிக்கப்பட்ட ஐந்து A5 தாள்கள் குத்தூசிகளால் இணைக்கப்பட்டிருந்தன. புத்தகத் தலைப்பின் கீழே இரண்டு கோணல் மாணலான கோடுகள் வரைந்திருந்தேன். ஒரு கோடு இடப்புறமாக ஆறு படிகளில் மேலேறிச் செல்வதுபோலவும், மற்றொன்று வலப்புறமாக ஏழு படிகளில் கீழிறங்கி வருவதுபோலவும் இருந்தன. அது ஏதேனும் முன்னட்டை சித்திரமா? அல்லது வெறும் கிறுக்கலா? 1979 என்று வருடமும் என் பெயரும் பின்னட்டையில் எழுதப்பட்டு, உள்ளேயிருந்த பக்கங்களில் எட்டுக...