போதம்
அன்று அதிகாலை மண்ணூர் பைபாஸில் பேருந்து நின்றது. நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக நடத்துனர் என்னை எழுப்பினார். தூக்கம் கலையாத கண்களுடன் அவரை ஏறெடுத்துப் பார்த்தேன். அவர் என்னை அவசரப்படுத்தினார். "சரி நீங்க போங்க நான் வர்றேன்" என்று அவரிடம் கூறிவிட்டு எனது உள்ளாடையை சரி செய்து முதுகு பக்கம் கைகளை மடக்கி கொக்கியை மாட்டினேன். கீழாடையின் நாடாவையும் இறுக்கிக் கட்டினேன். செல்ஃபோன், ஹியர் ஃபோன், சார்ஜர், இரவு பாதி படித்து முடித்திருந்த நாவல் அனைத்தையும் கைப்பைக்குள் திணித்து விட்டு, தலைமுடியை இழுத்துக் கட்டி ஹேர் கிளிப் வைத்து சரிசெய்து கொண்டேன். "மேடம்..எவ்வளவு நேரம்? உங்க ஒருத்தங்களுக்காக பஸ் பத்து நிமிஷமா நிக்குது" என்று உறுமினார் நடத்துனர். "இருங்க சார் வர்றேன்" என்று அவரை கடிந்து கொண்டே வேகமாக மேல் பெர்த்திலிருந்து இறங்கினேன். எதிரே கீழிருக்கையில் படுத்துக் கொண்டிருந்த ஆண் எனது செய்கைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தார் என்று அப்பொழுதுதான் தெரிந்தது. பேருந்திலிருந்து இறங்கியதும் எனது ட்ராலி பேக் சாலையில் குப்புறக் கிடந்ததைப் பார்த்து கோ...