Posts

முதுபறவை

அவளை சந்தித்து பல மாதங்கள் வரை வெறும் நலம் விசாரிப்புகள் அளவிற்கு மட்டும்தான் அவள் பழக்கமாயிருந்தாள். நானும் அவளும் பழக எந்தவொரு காரணமும் அவசியமும் ஏற்பட்டதில்லை என்பதே அதற்கான நியாயமாயிருந்தது. முற்றிலும் வெவ்வேறான இன்னும் சொல்லப்போனால் முற்றிலும் எதிரெதிர் கோணங்களில் வாழ்வை எதிர்கொண்டிருந்தவர்கள் எனவும் கொள்ளலாம். அவள் முகத்தைக் கூட சரியாகக் கண்டதில்லை நான். எந்நேரமும் முக்காடிடப்பட்ட முகம், கணவருடன் மட்டுமே வெளியே செல்வதும் வருவதுமாக அவள் வாழ்க்கை,வீடு, வீட்டின் முற்றம், குழந்தைகள், அண்டை வீட்டாரிடம் குடும்ப பெருமைகள் குலப்பெருமைகள் பேசிக்கொண்டு கழிந்த அவளது பகல் நேரங்களோடு சற்றும் பொருந்திப் போகாத என் வாழ்வும் நேரமும் நாங்கள் அன்னியப்பட்டே இருந்ததற்கு போதுமான காரணங்கள் அளித்திருந்தன. அவள் அப்பொழுதே ஐம்பது வயதைக் கடந்திருந்தாள். தலைமுறை இடைவெளியும் எங்களுக்குள் தேவையான இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. அவளால் எனக்கு எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை ஆனால் நான் அவள் மனதில் பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தியிருப்பது யாரோ ஒரு மூன்றாம் நபர் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அப்பொழுதிலிருந்து நானும் ...

ஆண் நதி

 ஆண் நதி. நானும் பத்மபென்னும் மொட்டை மாடியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.  அவர் தமது வெண்டைச் செடிகளை பார்வையிட்டவாறே தேநீர் அருந்தினார். வெண்டைப் பூக்கள் வசீகர நிறக்கோர்வை கொண்டவை.என்னைக் கேட்டால் ரோஜாப் பூக்களைவிட வெண்டை பூக்கள்தான் அழகென்பேன். இளமஞ்சல் நிற இதழ்கள் நடுப்பகுதி அரக்குச் சிவப்பு. குவிந்தும் குவியாமலும் ஒரு மலர்ச்சி. பூக்களைக் கிள்ளிப் பறிப்பதை அதுவரை செய்திராத என்னை மோகத்தில் ஆழ்த்தின அப்பூக்கள். "ஒரு பூ எடுத்துக்கட்டுமா பத்ம" என்றேன். தேநீர் அருந்தியபடியே அவர் "ம்ஹூம்" என்றார். அவர் பொதுவாக அப்படி மறுப்பவர் அல்ல. என் பெருமூச்சின் வெப்பம் அவரை நிச்சயம் தடுமாறச் செய்திருக்கும். அவர் சிரித்துக் கொண்டே  " நிறைய வெண்டைக்காய் தருகிறேன் சரியா? என்றார்.  "அட போங்க பத்ம,யாருக்கு வேணும் வெண்டைக்காய், இந்த பூ ஒண்ணு போதும், தலையில சூடிப்பேன். ப்ளீஸ்" என்றேன். அவரால் அது முடியவில்லை. கவனமாக எங்கள் உரையாடலின் திசையை மாற்றினார்.     என் பெயருக்கு ஏதோ கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். அடுத்தமுறை தெருவின் பெயரை சரியாக எழுதுமாறு கூறினார். "நிர...

எஸ்தரின் தனங்கள்

Image
எஸ்தரை  நினைவுகூரும் போதெல்லாம் எனக்கு, அதாவது இதை எழுதும் பெண்ணான எனக்கு சட்டென ஞாபகம் வருவது அவளுடைய தனங்கள்தான்.  கடைசியாக அவளை நான் சந்தித்த பொழுது அவள் சென்னை கல்யாணி மருத்துவமனையில் ஜென்ரல் வார்டின் ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள்.  அதுவும் அன்றுதான்  சேர்க்கப்பட்டிருந்தாள்.   அதுவரை அவளது மூத்த மகளின் ஒண்டுக் குடித்தன வீட்டின் கதவிடுக்கு சந்தில் பழைய சாக்குத் துணியில் மலமும் மூத்திரமுமாகக் கிடந்தாள் எஸ்தர் . எண்பத்திரண்டு வயது அவளுக்கு.   சுமார் இருபத்திரண்டு வருடங்கள் முன்பு சில ஆண்டுகள் நான் அவளுடன் வாழ்ந்தேன். என் வாழ்வின் மிக முக்கியமான பருவத்தில் அவள் என்னோடு இருந்தாள்.  எஸ்தரின் கால் விரல்கள் தவளையின் விரல்களைப்போல விரிந்திருந்தன. ரப்பர் செருப்பணிந்து  அவள் வேகமாக நடக்கும்போதெல்லாம், அவளுடைய  வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக அவளைப் பின் தொடர்ந்தபோது, "இம்மாதிரியான விரல்கள் நீர் வாழ் மிருகங்களுக்குத்தானே இருக்கும், ஒரு வேளை இரவில் அனைவரும் உறங்கிய பின் எஸ்தர் மீனாகவோ தவளையாகவோ ஆமையாகவோ மாறி விடுவாளோ ...