சாட்சியம்
சென்ற வருடம் இந்நேரத்திற்கெல்லாம் அம்மரத்தில் ஊதா பூக்கள் பூத்து குலுங்கியதை நினைத்துப் பார்த்து அங்கலாய்த்துப் போனாள் செல்வி. தனது அலைபேசியில் சேமித்திருந்த புகைப்படங்களை தேடியெடுத்து எந்த மாதம் என்றும் உறுதிப் படுத்திக் கொண்டாள். சென்ற வருட மார்ச் மாத இறுதி நாட்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அவை. இப்பொழுது ஏப்ரல் முதல் வாரம் கடந்து விட்டது. ஊதா மரத்தில் பூக்களின் மொக்குகள் கூட தென்படாதது அவளது மனதை மிகவும் சஞ்சலப் படுத்தியது. ஒரு வேளை பூக்கும் பருவத்தை கடந்து விட்டதோ அம்மரம் என்று யோசித்தாள். அப்படியொன்றும் வயோதிகம் எட்டிவிடவில்லை மரத்திற்கு. கிளைகள் செழுமையான இலைகளைத் தாங்கியிருந்தன. பனிக்காலம் முடியும் வரை மொட்டையாக நின்றிருந்த மரத்தில் ஒரே மாதத்தில் துளிர்விடத் தொடங்கியிருந்தது. சில மாதங்கள் முன்பு வரை நடைபயிற்சியின் போது மட்டுமே கண்டு பழகிய மரத்திற்கு அருகிலேயே தனக்கு குவார்ட்டர்ஸ் ஒதுக்கப் பட்டதும் அங்கு குடியேறுவதற்கு உடனே சம்மதம் தெரிவித்தாள் செல்வி. அவர்களுக்கு முன்பு காத்திருப்புப் பட்டியலில் இருந்த யோகேஷ் தம்பதியினர் வீட்டைப் பார்த்து விட்டு அதில் குடியே...